விடுமுறை
பகுதி - 3
பேருந்து நேராக பள்ளியின் நிறுத்தத்தை நெருங்க....
பேருந்தில் இருந்து இறங்கினர் நண்பர்கள் மூவரும் "அவர்கள் மனதின் ஏதோ ஒரு மூலையில் விடுமுறை என்ற எண்ணம் மிச்சம் இருந்தது"
பள்ளியின் வாசலை அடைந்தனர்,
வாட்ச்மேன் : தம்பி, இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்களே லீவுனு தெரியாதா?யாரும் உங்க கிட்ட சொல்லலையா
அறிவு , கலை , மதன் : மூவரும் ஒன்றாக என்ன லீவா, இல்லைணா வீட்டுல இருந்து கிளம்பும் போது நியூஸ் பாரத்தோமே போடலைய
வாட்ச்மேன் : இல்லை தம்பி இப்போ தான் பா நியூஸ் வந்துச்சு, சீக்கிரம் சொன்னா தான் என்னப்பா இவங்களுக்கு, நம்ம உயிர வாங்குறாங்க
அறிவு : ஆமா அண்ணா எவ்வளவு லேட்டா சொல்றாங்க பாருங்க!
கலை : சரி டா மச்சான், இப்போ நம்ம வந்த பஸ் திரும்பி வரும், அதுலயே போயிரலாம்.. அடுத்த பஸ்லா ரொம்ப நேரத்துக்கு அப்புறம் தான் வரும் வாங்கடா மச்சான் போலாம்
என மூவரும் கிளம்ப முற்பட்டனர்.
வாட்ச்மேன் : தம்பி, தம்பி, நில்லுங்க எங்க போறீங்க? உள்ள போங்க
மதன் : அண்ணே! இப்போ தான் லீவுனு சொன்னீங்களே அதான் சீக்கிரம் வீட்டுக்கு போனும்ல
வாட்ச்மேன் : லீவு வாராதவங்களுக்கு, உங்களுக்கு இல்லப்பா, வந்த பசங்கள திரும்ப அனுப்ப வேணாம் உள்ள அனுப்புன்னு ஹெட் மாஸ்டர் சொல்லிருக்காரு,
வெற்றி : அண்ணே, அது என்னனே எங்களுக்கு மட்டும் ஸ்கூலு, லீவுனா எல்லாருக்கும் தானா
வாட்ச்மேன் : இல்லப்பா, மழைல பசங்கள திருப்பி அனுப்ப வேண்டாம், நீ உள்ள அனுப்பு மதியத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம் சொல்லிட்டாறு
கலை : அண்ணே, அவுங்களுக்கு தெரியவா போது?கண்டுக்காம விடுங்கண்னே
வாட்ச்மேன் : தம்பி, சிசிடிவி இருக்கு மறந்துட்டீங்களா? நாளைக்கு எனக்கு தான் பிரச்சனை, உள்ள போங்க பா
மூவரும் : அண்ணே பிளீஸ்ணே, நாங்க பத்திரமா போயிருவோம்ணே
வாட்ச்மேன் : தம்பி, எதுனாலும் ஹெட் மாஸ்டர் கிட்ட கேட்டுக்கோங்க, இப்போ உள்ள போங்க பா என அனுப்ப
மூவரும் வேறு வழியின்றி உள்ளே நுழைந்தனர்.
வெற்றி : டேய், மதன் என்ன சொன்ன லீவுலா இருக்காதா, அங்கயே கேட்டருக்கலாம் உன் பேச்சை கேட்டேன் பாரு
கலை : மச்சான், அது மட்டுமா முன்னாடி பஸ்ல எல்லாரும் போய்டாங்கலா சாருக்கு
மதன் : டேய், மச்சான் விடுங்க டா, எனக்கு தெரிஞ்சு இன்னைக்கு பாதி நாள் தான் டா இருக்கும், மதியம் போயிரலாம்
மதன், வெற்றியை திட்டி கொண்டே சென்றான்
கலை : டேய் அங்க பாருங்க, ஹெட் மாஸ்டர் டா நிக்கறாங்க அமைதியா இருங்க
மூவரும் அமைதியாக வகுப்பறையை நோக்கி நடந்தனர்.
வகுப்பறையில் நுழைந்ததும்,
அங்கு விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் படித்து கொண்டிருக்க, அவர்களை தவிர வேறு ஒருவர் கூட இல்லை.
ஆச்சரியத்துடன்,மாணவர்களில் ஒருவரிடம்
வெற்றி : டேய்! கிஷோர் என்ன டா ஒருத்தன் கூட காணோம்? எல்லாரும் எங்க போனாங்க
கிஷோர் : வெற்றி டேய் யாரும் வரலை, பக்கத்து கிளாஸ்ல பரவால்ல கொஞ்சம் பேராது வந்துருக்காங்க
கலை : அப்படினா, நாங்க மட்டும் தான் வந்திருகோமா? என்ன டா இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே, ஒரு நாள் லீவு போச்சே டா
மதன் : ஆமா எப்படி டா ஒருத்தன் கூட வராம இருப்பான், நாங்க வீட்டுல இருந்து கிளம்புர வர செய்தில லீவு பத்தி எதுவுமே போடலையே
கிஷோர் : மச்சான் உங்க யாரு கிட்டயும் ஃபோன் இல்லையா? வாட்ஸ் ஆப் குரூப்ல பசங்க போட்டு விட்டாங்கல, வெற்றி நீ தான் குரூப்ல இருக்கியே பார்க்கல
வெற்றி : இல்லை கிஷோர், காலைல ஃபோன் யூஸ் பண்ண மாட்டேன் டா, அம்மா எடுக்க விட மாட்டாங்க
கிஷோர் : ஹா..ஆஆஆ ஏன் டா குரூப் எதுக்கு வச்சிருக்கோம் இந்த மாதிரி எதாச்சு நியூஸ்னா பகிர்ந்துக்க தானா, அப்புறம் எதுக்கு அந்த ஃபோன்
மதன் : கலை, அவன பிடி டா, என்னால சொன்னான் அவன் என்னை
மதனும் ,கலையும் வெற்றியை துரத்த ஓட வெற்றி வகுப்பறையை சுற்றி சுற்றி ,பென்ச் மீது ஏறி குதித்து ஓடினான்.
அவனை துரத்தி பிடிக்க, நண்பர்கள் மூவரும் சிரித்தபடியே மூச்சிறைக்க நின்றனர்.
மதன் : டேய், என்ன டா சொன்ன நீ, நான் காரணமா, ஏன் டா டேய் நீ கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு தடவை குரூப்ல செக் பன்னிருந்தா, இந்நேரம் நிம்மதியா டிவி பார்த்துட்டு இருந்திருப்பேன்
கலை : டேய் வெற்றி! உன்னால ஒரு நாள் லீவு போச்சே டா....
ஆசிரியர் வருவதை பார்த்த நண்பர்கள் மூவரும் அவர் வருவதற்க்குள் அமைதியா ஒரு இருக்கையில் அமர்ந்தனர்
ஆசிரியர் : டேய் என்ன டா இந்த கிளாஸ்ல தான் அவ்வளவு சத்தம், பத்து பெரு கூட இல்ல, கிளாஸ்ல விளையாடிக்கிட்டு இருக்கீங்க,
மதன் : சார் இன்னும் எந்த சாரும் வரல
ஆசிரியர் : சார் இல்லைனா அமைதியா இருக்க தெரியாதா? படிக்குறதுலா இல்லையா
லீவே லேட்டா தான டா சொன்னாங்க.. அதுக்குள்ள எப்படி டா எல்லாருக்கும் ஷேர் பண்ணீங்க, நீங்க மூணு பேரும் மட்டும் வந்துட்டீங்க, நீங்கலா குரூப்ல இல்லையா நீங்க வந்துருக்கீங்க
வெற்றி : சார் இன்னைக்கு ஆஃப் டே தான சார், மதியத்துக்கு அப்புறம் விற்றுவீங்களா
ஆசிரியர் : யாரு சொன்னா? அதுலாம் உங்கள விடுற ஐடியா இல்லை, சரி எல்லாரும் பேக் எடுத்திட்டு என் கூட வாங்க
மதன் : எங்க சார்
ஆசிரியர் : எங்கனு சொன்னா தான் சார் வருவிங்களோ? பேக் எடுத்துட்டு வாங்க டா
தொடரும்.....
Please Post Your Comments....
0 Comments