விடுமுறை
பகுதி - 2
மூவரும் பேருந்தில் ஏற ,
ஒரு கூட்டமே அவர்களுடன் பேருந்தில் ஏறியது, மதன் வேகமாக ஓடி சென்று ஜன்னல்(சாளரம்) ஓரமாக இருந்த இருக்கையில் இடம் பிடித்து அமர்ந்தான்.
மதன் : டேய் கலை இங்க வாங்க, இங்க வந்து உக்காருங்க, இங்க இடம் இருக்கு என அழைக்க.
வெற்றி : கலை, இங்க பாத்தியா நம்ம லீவு விடலையேனு கடுப்புல இருக்கோம், தலைவன் வேகமா போய் ஜன்னல் சீட் புடிச்சிட்டானா
கலை : இப்போ என்ன பண்ணுறேன்னு பாரு அவனை,
வெற்றி : டேய், என்ன பண்ண போற
கலை, வெற்றி இருவரும் அவன் அருகில் சென்று பேக்கை இருக்கையில் வைக்க,
கலை : மதன், வெற்றிக்கு பேனா வாங்கணுமா நாங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வந்துறோம் நீ பேக்கை பாத்துக்கோ என கூற
மதன் : இல்லை, இல்லை நானும் வாரேன் நீங்க என்ன விட்டுட்டு வேற ஏதாச்சு வாங்கி சாப்பிட்ருவீங்க தெரியும் டா உங்கள பத்தி
மூவரும் பேருந்தில் இருந்து இறங்கினர், மதன் முன்னே செல்ல இருவரும் அவன் பின்னே வந்தனர்
கடையை நெருங்கியதும், கலை, வெற்றி இருவரும் திரும்பி பேருந்தை நோக்கி வேகமாக ஓட
மதன் : டேய் ஏன் டா ஓடுறீங்க என அவர்கள் பின்னே ஓட
பேருந்தில் நுழைந்த கலையோ, நேராக மதன் அமர்ந்திருந்த ஜன்னல் ஓர இருக்கையில் அமர்த்தான்.
கலை : வா டா மதனு, வா இங்க வந்து உக்காரு இங்க இடம் இருக்கு பாரு
மதன் : கலை எழுத்துரு டா அது என் இடம், நான் தான் முதல்ல வந்து இடம் போட்டேன்
கலை : முதல்ல வந்தது நான் டா, நீ மூணாவதா தான வந்த
கலை, வெற்றி இருவரும் மதனை பார்த்து சிரிக்க, மதன் அவர்களை முறைத்த படி அமர்த்தான்.
வெற்றி : டேய், கவனிச்சீங்களா பஸ்ல பெருசா ஸ்கூல் பசங்க யாருமே இல்லையடா, ஒரு வேளை இருக்குமோ
கலை : ஆமா வெற்றி கொஞ்சம் கொஞ்சம் தான் இருக்காங்க, நிறைய பேர காணுமே டா
மதன் : டேய் இதுக்கு முன்னாடி போன பஸ்ல எல்லாரும் போயிருப்பாங்க அது இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா போயிட்டு
வெற்றி : அது எப்படி உனக்கு தெரியும், ஆமா நீ எங்களை குழப்பி விடுற மாதிரி இருக்கே
மதன் : இல்லை டா, நாம எப்பவும் அந்த பஸ்ல தான போவோம் அதான் வந்தோன ஸ்டாப்ல இருந்த ஒரு அண்ணா கிட்ட கேட்டேன் சொன்னாங்க
வெற்றி : கலை இவன் சொல்றது உண்மையா, நீயும் கூட தான் இருந்திருப்ப இவன் கேட்டத நீ பார்க்கலயா
கலை : இல்லை வெற்றி, அவன் எனக்கு முன்னாடியே வந்துட்டான் , நீ வரதுக்கு கொஞ்சம் நேரம் முன்னே தான் நானும் வந்தேன்
அவர்கள் பேசி கொண்டிருக்க பேருந்து உறும, பேருந்து நிலையத்தை விட்டு புறப்பட்டது.
மதன் : வெற்றி, நேத்து ஒரு மேக்ஸ் வீட்டு பாடம் கொடுத்தாங்கள மூடிச்சிடீங்களா, லீவு விட்ருவாங்கனு நெனச்சு நான் எழுத்தல டா
கலை : ஒஓ.. இத முடிக்காம தான் ஸ்கூலுக்கு போறதுக்கு இவ்வளவு ஆர்வமா இருந்தியா
மதன் : அதான் என் பிரண்ட்ஸ் நீங்க இருக்கீங்கல, அப்படினா கலை வீட்டு பாடம்லா எழுதிட்டு வர ஆரம்பிச்சிட்டியா, சரி நோட்டை குடு
கலை : மன்னிச்சிக்க டா கலை என தலையை சொரிய
மதன் : ஏன் கலை
கலை : இல்லை மதனு நானும் முடிக்கல, நானும் லீவு விடுவாங்கனு தான் எழுதாம தூங்கிட்டேன்
மதன் : நெனச்சேன் டா, நீயாது எழுதுரதாது, வெற்றி நீ எழுதிருப்பல்ல குடு போறதுக்குள்ள அத பார்த்து எழுதீறோம்
வெற்றி : மதனு நானும் எழுதல டா உங்கள மாதிரி தான் லீவ் விட்ருவாங்கனு நெனச்சி சீக்கிரமே தூங்கிட்டேன்.
மதன் : சுத்தம் யாருமே எழுதலயா ரெண்டாவது பீரியட் மேக்ஸ் தான், வந்தோன முதல்ல அத தான் கேப்பாங்க
கலை : சரி வாங்க அங்க போனதுக்கு அப்புறம் எவனாது எழுதிருப்பான், அவனை பாத்து காப்பி பண்ணிப்போம்
என கலை கூற, மூவரும் பேசி சிரித்தபடி,
பயணம் தொடர்ந்தது..
More Post's... click
Previous Post : விடுமுறை பகுதி - 1
Next Post : விடுமுறை பகுதி - 2
Telegram Channel for offer : click 🔳
Please Post Your Comment's....
0 Comments