விடுமுறை
பகுதி - 1
மணி காலை 7 ஆகிறது , நேற்று இரவு முதல் இன்று காலை வரை ,மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது.
தன் அறையின் ஓரம் ,சாளரத்தின் வழியாக அறிவு மழையையே வேடிக்கை பார்த்து கொண்டிருக்க ,மழை சற்று தூரல் போட்டவாரே கணபட்டது.
அம்மா : அறிவு,....
ஏய்.. அறிவு, ஸ்கூலுக்கு கிளம்பலாய ,சீக்கிரம் வந்து கிளம்புர வேலயை பாரு என கத்த,
அறிவு : அம்மா ,மழை பெய்து மா , நீங்க வேணா பாருங்க கண்டிப்பா லீவு விற்றுவாங்க, கொஞ்ச நேரம் பார்க்குறேனே, இல்லைனா பஸ் ஸ்டாண்ட் வர போய்ட்டு திரும்ப வரணும் மா.......
அம்மா : அறிவு, நீ முதல்ல கிளம்பு அப்படி ஒன்னும் பெருசா மழை பெய்யழலையடா.. லீவு லா விட மாட்டாங்க
அறிவு : அம்மா என அறிவு சினுங்க,
அம்மா : போய் கெளம்புன்னு சொன்னேன்.
அவன் முகம் வாடியே போனது
குளியலறைக்குள் சென்று, ஷவரை திறக்க, அதிலிருந்து தண்ணீர் மழை சாரல் போல அடித்தது
பாவம் அவன் மனமோ "ஷவர்ல வர அளவுக்கு கூட இந்த மேகத்துல வரல, மேகம்லா நல்லா கருப்பா தான் இருக்கு, இப்படி பெய்ஞ்ச பின்ன எப்படி லீவு விடுவாங்க" ச்ச.. என சலிப்புடன் நினைத்து கொண்டான்.
அறிவு குளித்து முடித்து வெளியே வர, அறிவின் அப்பா டிவியில் காமெடி பார்த்து கொண்டு இருந்தார்.
அறிவு : அப்பா செய்தி வைச்சு பாத்திங்களா, லீவு ஏதும் போடுறாங்களா பார்ப்போம்
அவர் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றி செய்தி வைக்க
பிளாஷ் செய்திகளில் எந்ததெந்த மாவட்டத்துக்கு லீவு என ஓடின, அவன் கண்கள் அவன் மாவட்டத்தை தேடியது
ஏமாற்றத்துடன்
"பக்கத்து மாவட்டத்துக்கு லா லீவு போடுறாங்க, காலைல இருந்து மழை எப்படி பெய்தது அத பார்த்தாது லீவ் விடுறாங்கலா பாரு ச்ச..
அம்மா : அறிவு என்ன டிவி பாத்துட்டு இருக்க ,லீவு லா விட மாட்டாங்க, இந்தா ஒழுங்கா சாப்பிட்டு, சீக்கிரம் ஸ்கூலுக்கு கிளம்பு
என்னங்க நீங்க டிவிய அணைங்க, அவன் டிவிய பாத்துக்கிட்டே இருப்பான், ஸ்கூல்க்கு கிளம்ப மாட்டான் என கூற அவர் டிவியை அணைத்தார்.
அறிவு : அம்மா, மழை பெய்ஞ்சிட்டு இருக்குல்ல ,மழை நிக்கட்டும் அப்புறமா கிளம்புறேன்,என அவருக்கு ஐஸ் வைக்கும் படி கேட்க
அம்மா : டேய் மழை தூர தான் செய்து ,இந்தா குடை, எடுத்துட்டு கிளம்பு நேரம் ஆச்சு என கூற
சாப்பிட்டு முடித்து விட்டு,பேக்கை தோளில் போட்டு கொண்டு, ஷூவுக்குள் கால்களை நுழைத்தான், பேருந்து நிலையத்துக்கு விரைந்தான்,
விடுமுறையா,
அவனுக்கு முன்னே அவனது நண்பர்கள் கலை, மதன் இருவரும் அவனுக்காக அங்கு காத்திருக்க
மதன் : டேய், என்ன டா கலை வெற்றியை காணும்
கலை : ஆமா டா இன்னும் காணுமே, ஒரு வேளை வர மாட்டானோ
மதன் : யாரு அவனா, நம்ம பையன அவுங்க அம்மா நாலு சாத்து சாத்தி அனுப்பி விட்ருப்பாங்க புலம்பிக்கிட்டே வருவான் பாரு
கலை : ஆமா ஆமா சரியா சொன்னே, மதன் அங்க பாரு வெற்றி வாரான்
வா டா வெற்றி, நீ வர மாட்டே நினைச்சேன், நல்ல வேளை வந்துட்ட, என்ன புலம்பி கிட்டே வார
வெற்றி : அம்மா துரத்தி விட்டாங்க டா, லீவு போடலாம்னு பாத்தேன்
இருவரும் அவனை பார்த்து சிரிக்க , தலையை சொரிந்தபடி அவனும் சிரித்தான்
மதன் : டேய் நேத்து நைட்ல இருந்து மழை பெய்து, லீவு விடுவாங்கனு பாத்தா விடலையே மச்சான் ச்ச....
கலை : அதே மழை காலைல வர பெய்ஞ்சிருந்த கண்டிப்பா லீவு விட்ருப்பாங்க, காலைல தான் தூர ஆரமிச்சிட்டே
அறிவு : கலை அன்னைக்கும் ஒரு நாள் இப்படி தான் பெய்ஞ்சுது நியாபகம் இருக்கா, அதே மாதிரி விட்ருவாங்கனு தான் டா நெனச்சேன்
டேய் மதன் ஒரு வேலை நாம கிளம்புனதுக்கு அப்புறம் லீவ் சொல்லிருந்தாங்கன்னா, யாரு கிட்டையாது கேட்டு பாப்போமா
கலை : ஆமா டா லீவே விட்ருந்தாலும், அது தெரியாம ஸ்கூலுக்கு போனோம்னா,அதான் வந்துடீங்கல்லனு உக்கார வச்சிருவாங்க
மதன் : டேய் இதுக்கு மேல லீவுலா விட மாட்டாங்க, கண்டிப்பா ஸ்கூல் இருக்க தான் செய்யும், போன தடவ பண்ண அதே தப்பா மறுபடியும் பண்ண மாட்டாங்க, அங்க பாரு மழை தூரிகிட்டு தான் இருக்கு
அவர்கள் பேசி கொண்டு இருக்க, பேருந்து அதன் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தது,
மூவரும் பேருந்தில் ஏறினார்.
பேருந்தில் அவர்களது பயணம் தொடரும்...விடுமுறை
விடுமுறை - 2 click..
விடுமுறை - 3 click..
Telegram Channel for offer : click 🔳
மேலும் பதிவுகள் click..
Please Post Your Comment.........
0 Comments