கல்வி
முகில், தனது கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தான்.
அவன் பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டு இருந்த போது, அவன் அருகில் வேலைக்கு செல்வதற்காக ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான்.
புத்தகம் சுமக்க வேண்டிய அச்சிறுவனின் கைகளில், மண் வெட்டியை சுமந்து கொண்டு இருக்க,
அவனிடம் முகில், "தம்பி நீ பள்ளிக்கு போகாம, ஏன் வேலைக்கு போற என கேட்டான்".
அதற்கு அவன் "இல்லைண்ணே, என்ன எங்க வீட்டுல படிக்க தான் சொல்றாங்க,
ஆனா குடும்ப கஷ்டத்தை பாத்தா படிக்க முடியல, வேலைக்கு போறேன் சொல்லிட்டேன்"
அதுனால என்ன தம்பி வேலைக்கு போய்ட்டே படிக்க வேண்டியது தான, படிப்பு ரொம்ப முக்கியம் பா என முகில் அவனிடம் கூற,
என்ன அண்ணே வேலைக்கு போயிட்டே எப்படி படிக்க முடியும், என அவன் கூறினான்.
அதை கேட்ட முகில், எனக்கும் உன்ன மாதிரி ஒருத்தன தெரியும் அவன்,
அந்த மாணவன் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான், மிக திறமையானவன்,
அவனுடைய வகுப்பில், அவனே முதல் மதிப்பெண் எடுப்பான்,
இந்த வருடம் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் நீ தான் எடுப்ப்பாய் என ஆசிரியர்களே பாராட்டும் அளவிற்கு படித்தான்.
ஆனால் அன்று மாலை அவன் வீட்டுக்கு செல்ல,
அவன் தந்தை அவனுக்கு அதிர்ச்சி வைத்திருந்தார், "குடும்ப கஷ்டம் காரணமாக அவனை படிப்பை நிறுத்தி விட வற்புறுத்தினார்"
ஆனால் அவனோ தந்தையிடம் "அப்பா இந்த வருஷ பொது தேர்வை மட்டும் எழுதிக்குறேன் பா, இந்த 10th மார்க் வச்சு அரசு வேலை வாங்கலாம் என்னை இதையாச்சு படிக்க விடுங்க என கெஞ்சினான்"
அவன் தந்தையோ அதற்க்கு சம்மதிக்கவே இல்லை, விடா பிடியாக படிப்பை நிறுத்திட்டார்.
ஆனால் அவன், அந்த பள்ளி ஆசிரியர் ,நண்பர்க அனைவரின் உதவியுடன் வேலைக்கு பொய்கொண்டே கிடைக்கும் நேரத்தில் படித்தான்.
அந்த ஆண்டு பொது தேர்வு வந்தது "தந்தையிடம் சென்று தேர்வு எழுதவாது அனுமதி தாருங்கள் என கேட்க, அவர் அதற்க்கு மட்டும் தான் அனுமதி கொடுத்தாரு"
அவருக்கு ஒன்றும் தனது மகனை படிக்க வைக்க கூடாது என்ற ஆசையெல்லாம் இல்லை, அவரால் அவனையும் படிக்க வைத்து, வீட்டையும் கவனிக்க முடியவில்லை "வறுமையே இந்த நிலைக்கு காரணம்".
பொது தேர்வும் வந்தது, அனைத்து தேர்வையும் சிறப்பாக முடித்தான். மதிப்பெண் வெளியிடும் நாள் அன்று
அவன் பள்ளியில் இருந்து அவர் தந்தையின் கைபேசிக்கு அழைப்பு வர, அதில் அவர்கள் இருவரையும் பள்ளிக்கு வர அழைத்தனர்.
அன்று தான் அவனுக்கு அந்த ஆச்சரியமே காத்திருந்தது "தலைமை ஆசியர், அவன் தந்தையிடம்,
தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தும் வறுமையினால் படிப்பை தொடர முடியாத மாணவர்களை தேர்ந்து எடுத்து,
அவர்களின் உயர் படிப்புக்கு தேவையான செலவையும், மாதம் 3000 ஊக்க தொகை அளித்து தொடர்ந்து படிக்க வைக்கிறார்கள். அதில் இம்முறை உங்கள் பையனை அவர்கள் தேர்தெடுத்திருகிறார்கள் என்றார்.
அவ்வாறு அவன் கூறி முடிக்க அவன் கல்லூரிக்கு செல்லும் பேருந்து வந்தது, "சரி டா எனக்கு இன்னைக்கு கல்லூரில பட்டமளிப்பு விழா" என கூறி அதில் அவன் ஏற,
அவனை பார்த்து அந்த மாணவர்கள், அண்ணே நீங்க சொன்ன பையன் யார் என கேட்க
சிறு புன்னகையுடன் நான் தான் தம்பி என கூற பேருந்து கிளம்பியது......
Telegram Channel for offer : click 🔲
மேலும் பதிவுகளுக்கு click....
Please Post Your Comments...........
0 Comments