மன்னரின் அச்சத்தால் நாட்டில் ஏற்பட்ட சிக்கல், அதை அமைச்சர் தீர்த்தாரா?
.png)
ஆதிநாதபரம் என்ற சிற்றரசுக்கு உட்பட்ட கடையனூர் என்ற ஊரை ஆதன் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார்.அவரின் ஆட்சியில் மக்கள் செழிப்பாகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
மன்னரின் அரசவையில் ஆதிநாதர் எனும் அறிஞர் தலைமை அமைச்சராக அமர்ந்து பல யோசனைகளை மன்னருக்கு வழங்கி வருகிறார்.ஆதிநாதர் திறமையும் ,நல்ல சிந்தனையும் ,இரக்க குணமும் கொண்டவர்.
அவர் நாட்டின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.தன் நாட்டு மக்களிடம் அன்பாக பழகி அவர்களின் குறைகளை அவ்வப்போது கேட்டும் வந்தார்.
அது போல் ஒரு நாள் மக்களின் குறைகளை கேட்க ஆதிநாதர் அந்த ஊரின் வீதிக்கு சென்று இருந்தார்.அங்குள்ள ஊர் பெரியவர்களிடம் மக்கள் படும் குறைகள் பற்றி கேட்க.
ஊர் பெரியவர் ஒருவர் ஆதிநாதரிடம், அய்யா! நமது நாட்டில் பருவத்திற்கு மழை பொழிவதால் விளைச்சலில் எந்த குறையும் இல்லை. ஆனால் கோடையில் மழை அளவு போன ஆண்டை விட குறைவாகவே பெய்து உள்ளது, அதனால் விளைச்சலும் போன ஆண்டை விட குறைவாகத்தான் உள்ளது.
அடுத்த ஆண்டும் கோடைல மழை அளவு கொறஞ்சு போன ரொம்ப சங்கடமுங்க, இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் நீங்கள் தான் அரசரிடம் பேசி அதற்க்கு எதாவது வலி செய்ய வேண்டும் என்றார்.
ஆதிநாதர்! அந்த பெரியவரிடம் அய்யா நீங்க கவலைபடாதிங்க நான் மன்னர்கிட்ட உங்க பிரச்சனைய பத்தி சொல்றேன்.அவர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.
அடுத்த நாள் அதிகாலை வேலையில் அன்றைய அரச காரியங்கள் குறித்து விவாதிக்க அரசவை கூடியது.அரசர் தலைமை அமைச்சர் ஆதிநாதரிடம் அமைச்சரே மக்கள் ஏதும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனரா என கேட்க ,
ஆதிநாதர் எழுந்து அரசே பணிகிறேன் தம் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர்.
நாட்டு மக்களின் நலன் கருதி அவ்வப்போது கேளிக்கைகளை நடத்தி அவர்களின் மனநலனில் கவனம் செலுத்தி வருகின்றீர்.அதனால் மக்கள் குறை ஏதும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சில பிரச்சனைகளை ஏற்படாமல் முன்கூட்டியே தவிர்க்கலாம், அது குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது என மன்னரிடம் கூறினார்.
மன்னர் உடனே! அது என்ன அமைச்சரே முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது குறித்து விளக்கமாக கூறும் என்றார்.அரசே இம்முறை மக்கள் கோடையில் நல்ல விளைச்சல் பார்த்து விட்டனர், இருந்தாலும் போன ஆண்டை விட மழை அளவு குறைந்துள்ளதால் விளைச்சலும் போன ஆண்டை விட சற்று குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு மழையின் அளவு மேலும் குறையுமா என்று அச்சம் மக்களின் மனதை பற்றியுள்ளது.
மன்னர் ஆதிநாதரை நோக்கி அமைச்சரே ஏதேனும் யோசனை தம்மிடம் உள்ளதா என்று வினாவ. அதனிநாதரோ! அரசே கார்காலம் வருவதற்குள் ஏரி ஒன்றை அமைத்து விட்டால் பெரு மழையே சேமித்து பின்பு கோடைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் கோடையில் மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படும், அவர்கள் வேளாண்மைக்கும் அந்த நீரை பயன் படுத்தி கொள்வர் என்று கூற.
அரசரோ! அமைச்சரே பருவத்திற்கு தான் மழை பொழிகிறதே ஏரி அமைப்பதற்கு என்ன அவசியம் வந்தது.இப்பொழுது பொழியும் மழையின் அளவு மேலும் குறைந்தால் ஏரி வெட்டுவது பற்றி விவாதிக்கலாம் என்று விவாதிக்க மறுத்து விட்டார்.அது மட்டும் அல்ல ஏரி அமைப்பதற்கு பெரும் செல்வத்தை செலவிட வேண்டி வரும் என்று அச்சம் கொண்டிருந்தார்.
பெரும் செல்வத்தை ஏரி வெட்ட பயன் படுத்திவிட்டால் அரச காரியங்களுக்கும், மக்களுக்கும் தேவைப்படும் போது செல்வத்திற்கு எங்கு செல்வது என்று தன் அச்சத்தை அமைச்சரிடம் கூறினார்.அமைச்சரோ அரசரை நோக்கி பெரும் செல்வத்தை இழந்தாலும், மழை பொய்த்து போனால் மக்கள் ஏரியில் உள்ள நீரை பயன்படுத்தி வேளாண்மை செய்வர்.
இதன் மூலம் மக்கள் வழக்கம் போல் நல்ல விளைச்சல் பெறுவர், அதனால் அரசின் செல்வம் பெருகும் என்றுரைத்தார்.
அமைச்சர் எவ்வளவு எடுத்துறைத்தும் அரசர் செவி கொடுத்து கேட்கவில்லை.
பருவங்கள் உருண்டோட விரைவாகவே கோடை நெருங்கியது மன்னர் நினைத்தது போல் அல்லாமல்,கோடை மழை பொய்த்து போனது. அதனால் மக்களால் விளைச்சலை காண முடியவில்லை ,அவர்களால் தங்கள் உணவு தேவைக்கு கூட செலவிட செல்வம் இன்றி தவித்தனர்.
நாட்டில் பஞ்சம் நிலவ தொடங்கியது.மக்கள் அனைவரும் படும் கஷ்டங்கள் மன்னரின் செவிகளை சென்று அடைந்தன.அவர் அமைச்சரை அழைத்து நாட்டின் நிலவும் இக்கட்டான சூழ்நிலை பற்றி அறிவுரை கேட்டார்.ஆதிநாதர் அரசே! தம் தனியா கிடங்கில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம்.
மேலும் தேவைப்பட்டால் பக்கத்துக்கு நாடுகளிடம் தானியங்களை வாங்கி மக்களுக்கு வழங்கலாம்.நம் கருவூலத்தில் இருக்கும் செல்வங்கள் இந்த பஞ்ச காலத்தை கடக்க நமக்கு உதவியாக இருக்கும் என்று அறிவுரை வழங்கினார்.
ஒரு வழியாக அமைச்சரின் அறிவுரையால் நாடு அந்த பஞ்சத்தை சமாளித்து, மக்கள் தங்களை இயல்பு வாழ்க்கையை வாழ தொண்டங்கினர்.
தன் தவறை உணர்ந்த மன்னர் அமைச்சரே!தாம் எவ்வளவோ கூறினீர் நானோ பெரும் செல்வதை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தமது அறிவுரையை ஏற்க மறுத்து விட்டேன்.உங்கள் அறிவுரை படி ஏரி அமைத்து இருந்தால் மக்களின் நீர் தேவையை நாம் பூர்த்தி செய்து இருக்கலாம்.
மக்களும் நல்ல விளைச்சல் செய்து வருமானம் ஈட்டி இருப்பர்.இதன் மூலம் நம் நாட்டின் செல்வமும் உயர்ந்து இருக்கும் என்று தம் தவறை நினைத்து வருத்தம் கொண்டார்.அமைச்சர் ஆதிநாதர் அரசரை நோக்கி அரசே கவலை வேண்டாம் தம் திறமையான ஆட்சியால் தானே மக்களின் குறைகளை தீர்க்க முடிந்தது.
இவ்வளவு செல்வத்தை ஏரிக்கு செலவு செய்து இருந்தால் நம் நாட்டின் செல்வம் இரு மடங்கு பெருகி இருக்கும்,அதே நேரம் பக்கத்து நாட்டை நம்பியிருக்க தேவை இருந்திருக்காது.
சரியாக சொன்னீர்கள் அமைச்சரே நம் நட்டு மக்களின் நலன் தான் நமக்கு முக்கியம் விரைந்து ஏரி ஒன்றை நம் நாட்டில் அமைக்க ஆணையிடுங்கள் என்றார்.மன்னரின் ஆணைப்படி ஏரி ஒன்று அமைக்கப்பட்டது.அந்த ஏரி மூலம் மக்கள் அனைவரும் நல்ல பலன் பெற்று மகிழ்ந்தனர்.
0 Comments