பழங்களின் புத்திசாலிதானம்
பழங்கள் தங்கள் ஆசையை மரத்திடம் கூற,
மரமே நான்கு பேரும் ஊருக்குள் சென்று பார்வையிட ஆசை கொள்கிறோம். அதனால் நீ எங்களை உதிர்த்து விடு என கேட்க,
மரமோ! அவைகள் மீது கொண்ட பொறாமையால் , இல்லை முடியாது என்னால் காண முடியாததை நீங்கள் யாரும் பார்க்க விட மாட்டேன் என்று மறுத்து விட்டது.
வருத்தத்துடன் இருந்த அவைகளோ எப்படியாவது இந்த மரத்தை விட்டு சென்று விட வேண்டும் என்று திட்டம் தீட்டின.
தினமும் காலை மரங்களை வெட்டி செல்ல மரவியாபாரி வனத்திற்கு வந்து செல்வான். அவனை எப்படியாவது இந்த மரத்தை வெட்ட வைத்து விட முடிவு செய்தன.
அன்று காலை பொழுதில் அந்த மரவியாபாரி மரத்தை வெட்ட அவ்வழியாக சென்றான்.அவனை யாரோ அழைப்பது போல இருந்தது, அவன் அங்கும் இங்கும் சுற்றி பார்க்க.
ஐயா, நாங்கள் தான் மேலே பாருங்கள் என்று கூப்பிடும் சத்தம் கேட்டு, அவனும் மேலே பார்த்தான்.
அந்த பழங்கள் அவனிடம்,
ஐயா நீங்கள் மரத்தை வெட்ட தானே வந்தீர்கள் என்று அவரிடம் கேட்டது.
அவரும் ஆம் என்று கூற,
நீண்ட நேரம் யோசனை செய்து விட்டு, நீங்கள் பார்க்க மிக கலைப்பாக தெரியுறீர்கள்.உங்களால் நீண்ட தூரம் செல்ல முடியாது.உங்களுக்கு வேண்டும் என்றால் நாங்கள் வசிக்கும் இந்த மரத்தை வெட்டி எடுத்து கொள்ளுங்கள். இது நீண்ட காலமாக இவ்விடத்தில் இருக்கிறது, மிகவும் உறுதியானது. இதை வேண்டுமானால் வெட்டி செல்லுங்கள் என்று கூறியது.
அவரோ , நீங்களும் இந்த மரத்தில் தானே உள்ளீர்கள் பிறகு ஏன் வெட்ட கூறுகிறீர்கள் என்றார்.
பழங்களோ, ஐயா எப்படியும் என்றாவது ஒரு நாள் இந்த மரத்தில் உள்ள குரங்குகள் எங்களை உண்டு விடும்.நீங்களாவது பலன் அடைவீர்கள் என்று தான் கூறினோம் வேண்டாம் என்றால் விடுங்கள்.
மரவியாபாரி, இல்லை பழங்களே என்னிடம் வருபவர்கள் கேட்க்கும் மரத்தை மட்டும் தான் நான் வெட்டி எடுக்கிறேன்.இப்பொது எனக்கு இம்மரம் பலன் அளிக்காது என்று கூறி அவ்விடம் விட்டு சென்றார்.
மரம் சத்தமாக நகைத்து அப்பழங்களை ஏலனம் செய்தது,
அதில் ஒரு பழம், இந்த மரத்தை ஏதும் செய்ய முடியாது போல நாமும் ஒரு நாள் குரங்குகளால் உண்ணப்படுவோம் , நம் ஆசை நிறைவேற போவதில்லை என்று வருந்த.
மற்றொரு பழமோ, இல்லை நண்பர்களே என்னிடம் ஒரு யோசனை உள்ளது. நாளை நாம் இந்த மரத்திடம் இருந்து நிச்சயம் விடுதலை பெறுவோம் என்று கூற பழங்கள் நிம்மதி அடைந்தன.
மறுநாள் அந்த நபர் அவ்வழியாக வர அப்பழங்கள் மீண்டும் அவரை அழைத்தது.
அவரோ, அப்பழங்களுக்கு காது கொடுக்காமல் தொடந்து நடக்க
பழங்கள், ஐயா நேற்று முக்கியமான ஒன்றை கூறுவதற்குள் தாங்கள் சென்று வீட்டிர்கள் என கூற
மரவியாபாரி, அதனை கண்டு கொள்ளாமல் சென்றார்.
பழங்களோ, இம்மரத்தின் அடியில் செல்வம் உள்ளது என சத்தமாக கத்த
மர வியாபாரி, என்ன இம்மரத்தின் அடியில் செல்வம் உள்ளதா என ஆச்சரியத்துடன் கேட்க
பழங்கள், ஆம் ஐயா சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வியாபாரி தினமும் தன் வேலைகளை முடித்து விட்டு இவ்வழியாக செல்வார்.ஒரு நாள் அவர் சேர்த்த செல்வத்தை இங்கு மறைத்து வைத்து விட்டு அதன் மீது அடையாளத்திற்காக இம்மரத்தை நட்டு வைத்து விட்டு விட்டாராம்.
மர வியாபாரியோ, அது உனக்கு எவ்வாறு தெரியும், எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய் என கேட்க
பழங்கள், இம்மரம் அருகில் உள்ள அனைத்து மரங்களிடம் அடிக்கடி கூறுவதை நாங்கள் கேட்டுள்ளோம்,
புதையல் இருந்தால் எடுத்து செல்லுங்கள் ஒரு வேளை இல்லையென்றாலும் இம்மரமும் உங்களுக்கு எவ்வாறாவது பலன் அளிக்கும் மேலும் இம்மரத்தில் உள்ள பழங்களை விற்பனை செய்யலாம் அல்லவா என்றது,
மரவியாபாரியோ, சரி இதில் உங்களுக்கு என்ன நன்மை என்று கேட்க
பழங்களோ, எங்களுக்கு ஊருக்குள் சென்று சுற்றி பார்க்க ஆசை நீங்கள் எங்களை எடுத்து கொண்டு ஊரை சுற்றி காட்ட வேண்டும் பின்பு எங்களை ஏதேனும் பழ வியாபாரியிடம் விற்று கொள்ளுங்கள் என கூற,
மர வியாபாரியோ, ஆம் இந்த பழங்கள் கூறுவதும் சரி தான் என மரத்தை வெட்ட ஆரம்பித்தார்.
அவர் வெட்ட வெட்ட மரத்தில் உள்ள அத்தனை பழங்களும் ஒவ்வொன்றாக கீழே விழுந்தன.
மரவியாபாரியோ, மரம் முழுவதாக வெட்டி பார்த்தார் புதையல் கிடைக்கவில்லை. அப்பழங்கள் கூறியது போல அந்த மரத்தை தூண்டு துண்டாக வெட்டி விற்றார். மேலும் அவைகள் கேட்டது போலே ஊர் முழுவதும் சுற்றி காண்பித்தவர், ஒரு பழக்கடையில் அதனை விற்றார்.
அந்த பழங்களை வாங்கி சென்ற நபர் அதை உண்ட பின்பு, அதன் விதையை அவரின் வீட்டின் பின் நட்டு வளர்த்தார்.அது வளர்ந்து மரமாக மாறி பல மாங்கனிகளை உற்பத்தி செய்தது.
தன்னால் முடியாததை பிறரும் செய்ய கூடாது என்று நினைத்ததால் மரம் அதன் உயிரை இழந்தது.ஆனால் பழங்களோ மரமாகி பிறரின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
0 Comments