மனிதர்கள் திருப்திப்படுத்துதல் என்பது முடியாத இலக்கு ,இறைவனை திருப்திப்படுத்துதல் என்பது அடையக்கூடிய இலக்கு



ஓர் ஊரில் வித்யூத், ராம் என்ற இரு நெருங்கிய நண்பர்கள் வாழ்ந்து வந்தன.இருவருக்கும் சொந்தங்கள் யாரும் இல்லை தனியாகவே வாழ்கின்றனர்.அவர்கள் இருவரும் தீவிர கடவுள் பக்தர்கள்.

காலை எழுந்ததும் நீராடிவிட்டு , ஒன்றாகவே கோவிலுக்கு செல்வது அவர்களின் வழக்கம்.கோவிலுக்கு சென்று வந்த பிறகே மற்ற வேலைகளை செய்வர்.ஏதேனும் சிறு காரியங்களை ஆரம்பிப்பதற்கு முன் கூட கடவுளை வணங்கி விட்டே வேலையை தொடங்குவர்.அவ்வூரில் உள்ள அனைவராலும் சிறந்த பக்திமான்களாகவே அறியப்பட்டனர்.

வித்யூத் ,செல்வந்தனாக மாளிகையில் வாழ்கின்றான்,

ராமோ, ஏழை ஓர் குடிசையில் போதும் என்ற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றான்.

அன்று வழக்கம் போல், இருவரும் ஒன்றாகவே கோவிலை அடைந்தனர்.கோவிலை அடைந்ததும் இருவரும் தத்தம் கைகளில் வைத்திருந்த அர்ச்சனை தட்டை கடவுளின் முன் வைக்க.

வித்யூத் தட்டில் இனிப்புகளும், பழங்களும் இருந்தன.ராமின் தட்டில் தேங்காய் மற்றும் ஒரு வாழைப்பழம் இருந்தது.

வித்யூத் ராமை பார்த்து, நண்பா நான் கொண்டு வந்துள்ள தட்டை பார் அதில் பல வகை பழங்களும், பல வகையான இனிப்புகளும் நிரம்பி உள்ளன.நான் இத்தனையும் படைத்தது வழிபடுவதால் தான் கடவுள் எனக்கு இவ்வளவு வசதிகளை அளித்துள்ளார்.

நீயோ வெறும் வாழைபழத்தை மட்டுமே வைத்து வழிபடுவதால் தான் இன்னும் அதே குடிசையிலேயே வாழ்கின்றாய்.  

ராமோ, என்னிடம் இருப்பதை இறைவனுக்கு படைக்கிறேன். எனக்கு அவர் செல்வங்களை கொடுக்காமல் இருக்கலாம்.ஆனால் மனநிறைவை அளித்துள்ளார்.

அது மட்டுமின்றி செல்வம் என்பது உழைப்பால் கிடைப்பது ,ஆனால் பக்தியோ அன்பால் பெறுவது.நான் கடவுளுக்கு பற்பல இனிப்புகளை அளிக்காமல் இருக்கலாம் ஆனால் இனிப்பான அன்பினை படைத்தே வணங்குகிறேன் என்றான்.

வித்யூத், அப்படியென்றால் எனக்கு கடவுள் மீது அன்பில்லை, அவர் மீது நான் ஆணவத்தை வெளிப்படுத்துகிறேன் அப்படித்தானே என்று கோவம் கொள்ள

ராமோ, இல்லை நண்பா நீயும் பக்தியுடன் தான் வணங்குகிறாய்.ஆனால் நீ கொண்டது மட்டுமே சிறந்த பக்தி என்று எண்ணாதே, கடவுள் செல்வங்களை அல்ல அன்பினையே உண்மையான பக்தியாக ஏற்று கொள்கிறார் என்று தான் கூறினேன்.

அவன் கூறியதை ஏற்காமல் வித்யூத் அவனிடம் சண்டையிட, இருவரின் வாக்குவாதமும் நீண்டு கொண்டே சென்றது.

திடீரென்று நிலம் அதிர்ந்தது, அவர்களை சுற்றிலும் காற்று வேகமாக வீச நிலை தடுமாறி கீழே விழுந்தனர், வானத்தை கிழித்து கொண்டு நெருப்பு ஜுவாலை வெளிவருவர, அவர்களை நோக்கி ஓர் அசரீரி குரல் கேட்டது.

அக்குரல் அவர்களை நோக்கி உங்கள் சண்டையை நிறுத்துங்கள் என சத்தம் போட அதிர்ச்சியடைந்தனர் 

இருவரும் அக்குரலை நோக்கி யார் நீ ஏன் எங்களை அச்சுறுத்துகிறாய் என்று கேட்க,

அந்த குரலோ , யாரா நான் யாரா? நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா என கேட்க?

ஆம் யார் என்று கூறாமல் இருந்தால் எங்களுக்கு எப்படி தெரியும் என்று பதிலுக்கு அவர்கள் கேட்க,

அக்குரல் ,என் சன்னதி முன்பே சண்டை இடுகிறீர்கள், பின்னே கண் முன் வந்தால் யார் என்றா கேட்குறீர்கள்? என்று கோவமாக கேட்டது,

இருவரும் அதிர்ச்சியில் உறைய ,

அக்குரல் மீண்டும் ஏன் என் சன்னதியின் முன் நின்று கொண்டு சண்டை இடுகிறீர்கள் என்று கேட்டது.

வித்யூத், நான் தினமும் பல் வகை சுவை மிக்க இனிப்புகள் படைத்து தம்மை வழிபடுகிறேன், இவனோ ஒரே வெறும் வாழைபழத்தை மட்டும் வைத்து வழிபடுகிறான் 

நீங்களே கூறுங்கள் எம் இருவரில் யார் உங்கள் ஆசியை பெறுகிறோம் என்று?

ராமோ, இல்லை இறைவா என் பக்தியை ஏலனம் செய்யாதே என்று தான் கூறினேன். தாமே கூறுங்கள் செல்வம் ,அன்பு இவற்றில் எது பக்திக்கு அவசியம்?

கடவுளோ, வித்யூத் எது பக்தி என்பதில் தானே உனக்கு குழப்பம் அதை அறிய நானே வழி கூறுகிறேன் நான் கூறுவதை இருவரும் செய்வீர்களா என்று கேட்க.

இருவரும் அதற்கு சம்மதித்தனர்,

கடவுள், வித்யூதை பார்த்து சரி நீ கிழக்கு நோக்கி செல்வாய், ராமை பார்த்து நீ மேற்கு நோக்கி செல் 

அங்கு உன் கண்களுக்கு  படும் பொருட்களில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டு வர வேண்டும்.

குறிப்பாக என் மனத்திற்கு திருப்தி அளிப்பதாக இருக்க வேண்டும்.அதற்கு நீங்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் 

மேலும் தாம் கைகளில் உள்ள செல்வங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறி மறைந்தார்.

வித்யூத் ராமை பார்த்து, உன்னிடம் எங்கு செல்வம் உள்ளது.நீ என்ன கொண்டு வருகிறாய் என்று நானும் பார்க்கிறேன் என ஏலனம் செய்தான். 

ராமோ, என்னால் இயன்றதை கொண்டு வருவேன்.என் இறைவன் அதை ஏற்று கொண்டால் அதுவே எனக்கு போதும் என்றான்.

இருவரும் அங்கிருந்து கிளம்பினர்,

வித்யூத், செழிப்பான மரங்கள் நிறைந்த வனத்தை அடைந்தான்.மரங்கள் அனைத்திலும் பழங்கள் கனிந்து தொங்கின. இது எப்படி சிறந்த பரிசாக இருக்க முடியும் நாம் தங்கத்தை அளிப்போம் என்று எண்ணம் தோன்ற.

மேலும் நடந்தான், தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், கோமேதகம் இப்படி பல பல பொருட்களை தேடி திரிந்து சேர்த்தான். 

இப்படியே நீண்ட நாட்களாக தேடி தேடி சேர்க்க நாட்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டாகின இதற்கு மேலும் தாமதம் கொள்ள கூடாது என்று நினைத்தவன்.

தான் கஷ்டபட்டு சேர்த்த அனைத்தையும் ஒரே ஆபரணமாக மாற்றி விடலாம் என்று முடிவு செய்து ஓர் ஆபரணத்தை செய்தான்.அதை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டான்.

நீண்ட நாட்களுக்கு பயணம் செய்து ஊரை அடைந்தவன்  நேராக கோவிலுக்கே புறப்பட்டான்.

கோவிலை அடைந்தவுடன்
 
வித்யூத் கடவுளை அழைக்க, அசரீரி குரல் ஒன்று நாளை இருவரும் என் சன்னதிக்கு வாருங்கள் அப்போது உன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று கூறி மறைந்தது.

வித்யூத், நேராக ராமனின் வீட்டை நோக்கி நடந்தான்.அவன் மனதில் ராமனை பற்றி இருந்த எண்ணங்கள் அவன் வீட்டை அடைந்ததும் தகர்ந்தது.குடிசையாக இருந்த அந்த இல்லம் மாளிகையை போல் காட்சி அளித்தது.அவன் மனதில் பொறாமை ஒரு புறம் தோன்ற,

மற்றொரு புறம் இவனே இந்த அளவுக்கு பொருள் செல்வதுடன் வாழ்கிறான் என்றால்,

நம் செல்வங்கள் அனைத்தும் பெருகி ஊரிலேயே மிக பெரிய பணக்காரனாக  நாம் மாறி இருப்போம் என்று எண்ணம் கொண்டான்.தன் மீது கொண்ட கர்வத்தால் நண்பனை சந்திக்காமலே தனது இல்லம் நோக்கி நடந்தான்.

வீட்டை அடைந்தவன் கண்களில் அதிர்ச்சி அலைகள் வீசி அடித்தன.அவன் வாழ்ந்த மாளிகை குடிசையாக மாறி இருந்தது.அவன் உள்ளம் தன் நிலை கண்டு வருத்தியது ,தனக்கு ஏன் இந்த நிலை என்பது அவனுக்கு புரியவில்லை. தனது செல்வங்கள் எங்கே போனது என்று  அறிய விரும்பினான்.அன்றிரவு அவனுக்கு தூக்கமே வர வில்லை 

மறுநாள் காலை விடிந்ததும் வழக்கம் போல் கோவிலுக்கு புறப்பட்டான்.கோவிலை அடைந்ததும் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் இருவரும் கோவிலில் சந்தித்து கொண்டனர்.

ராம் ,வித்யூத்தை பார்த்து அவனிடம் பேசுவதற்கு அருகில் வந்தான்.

ஆனால் வித்யூத்தோ, அவனிடம் முகம் கொடுக்காமல் கடந்து சென்றான்.

இருவரும் மனம்  உருகி வேண்டி அவரை அழைக்க  

அவர்கள் கண் முன் கடவுள் தோன்றி, நான் கூறிய காரியத்தை தாம் முடித்து விட்டீர்களா என்று கேட்ட படி,

ராமை நோக்கி நீ சென்ற இடத்தில் என்ன கிடைத்தது என்று கேட்டார்.

இறைவா, நான் இங்கு இருந்து சென்றதும் ஒரு வறண்ட நிலப்பரப்பை அடைந்தேன்.அந்த இடத்தில் ஒரு கிணற்றின் அருகில் ஒரு கொய்யா மரம் இருந்தது.அதில் இருந்த பழங்களில் ஓர் கொய்யப்பழத்தை மட்டும் பறித்து தமக்காக கொண்டு வந்துள்ளேன் என்றான்.

கடவுளோ, கொடு என்று பெற்று கொண்டார்.

பிறகு வித்யூத்தை, நோக்கி நீ சென்ற இடத்தில் என்ன கிடைத்தது என்று கேட்டார்.

நான் நீண்ட நாட்களாக தேடி அழைந்து, கடுமையாக உழைத்து சேர்த்த அனைத்து பொருட்களையும் ஓர் ஆபரணமாக செய்துள்ளேன்.தாம் தயவு செய்து எனது காணிக்கையை ஏற்று கொள்ளுங்கள் என்று கேட்டு கொண்டான். 

கடவுளோ, அதையும் கொடு என்று  பெற்று கொண்டார்.

வித்யூத் கடவுளை பார்த்து இறைவா இப்பொது கூறுங்கள் ,எங்களில் யார் சிறந்த பக்தியை வெளிப்படுத்தினோம் என கேட்க,

அவரோ, இரெண்டு காணிக்கைகளையும் ஆய்ந்து பார்த்தவர் எனக்கு உங்கள் இருவரின் பக்தியும் சமமாகவே தெரிகிறது என்றார். 

வித்யூத் அதிர்ச்சியுடன் கடவுளை நோக்கி, இறைவா நான் கண்ணை கவரக்கூடிய மிகவும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை தமக்காக அளித்துளேன். 

இவனோ வெறும் ஒற்றை பழத்தையே காணிக்கையாக கொண்டு வந்துள்ளான்  இரண்டும் எப்படி ஒன்றாகும் என்றான்.

அவரோ, வித்யூத் நீ அன்போடு அளித்ததால் அந்த ஆபரணத்தை நான் ஏற்று கொண்டேன். உண்மையை கூறப்போனால் எனக்கு அந்த பழமே போதுமானது.அது என் மனதிற்கு மிகவும் திருப்த்தி படுத்திவிட்டது.

உன் ஆபரணத்தை வைத்து நான் என செய்வது ,இருப்பினும் நீ என் மீது கொண்ட பக்தியாலே அதை பெற்று கொண்டேன்,

அதனால் தான் இருவரின் காணிக்கையும் எனக்கு சமமாக தெரிகிறது.பக்தர்கள் அளிக்கும் காணிக்கை எதுவானாலும் அதை அன்போடு அளித்தால் நான் அதை ஏற்று கொள்கிறேன் என்றார்.

வித்யூத், நீங்கள் என் காணிக்கையை ஏற்று கொள்கிறீர்கள் என்றால்.ஏன் என் செல்வங்களை அனைத்தையும் என்னிடம் இருந்து பறித்தீர்கள் என்று கேட்க,

கடவுளோ, நீ செல்வத்தை பக்தியாக நினைத்து உன் நேரம் அத்தனையும் எனக்கு சிறந்த காணிக்கை அளிக்க வேண்டும் என்பதிலேயே செலவிட்டாய்.ஆனால் இத்தனை நாட்களாக உன் சொத்துக்கள் அனைத்தும் எந்த பராமரிப்பும் இன்றி ஒன்றொண்டாக அழிந்ததை நீ அறியவில்லை, மாறாக உன் பயணத்திற்கு பெரும் செல்வதை செலவு செய்துள்ளாய் 

உன் மனம் போதும் என்று திருப்தி அடைந்து இருந்தால் இத்தனை ஆண்டுகள் நீ வீணாக்கி இருக்க மாட்டாய்.இதனால் உன் மனதிற்கு மகிழ்ச்சி கிட்டியதா? இல்லையே மாறாக மேலும் கவலைகளே உன்னை சூழ்ந்துள்ளது என்றார்.

ஆம் என்னை மன்னியுங்கள் இறைவா ,தாம் கூறியது சரியே நான் நன்றாக புரிந்து கொண்டேன்.இனி என்னிடம் இருப்பதே எனக்கு போதும் என்று வாழ்வேன்.

நண்பா என்னை மன்னித்து விடு நீ கூறியதை கேட்டிருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது.இப்போதே என் மனம் திருப்தியாக இருக்கிறது என்றான்.

ராமோ, வா நண்பா இவ்வளவு நாள் உனக்காகவே காத்திருந்தேன்.எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை.என்னோடு வா இருவரும் என் இல்லத்திற்கு செல்வோம் என்றான்.

வித்யூதோ, எப்போது என் மனதிற்கு போதும் என்ற எண்ணம் வந்ததோ அப்போதிலிருந்தே என் மனம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளது.நான் இனி அமைதியான வாழ்க்கையை வாழ ஆசை கொள்கிறேன்.அதனால் எனக்கு அந்த குடிசையே போதுமானதாக இருக்கும் என்றான்.

இருவரும் கடவுளிடம் எங்களுக்கு விடை கொடுங்கள் என்றனர்,

கடவுளோ, நில் வித்யூத் நீ என்னிடம் கொண்ட பக்தியால் மன நிறைவை, மகிழ்ச்சியும் பிராப்தம் பெற்றாய்.ஆனால் நீ இவ்வளவு நாள் கடுமையாக உழைத்துள்ளாய் உன் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறாமல் போகிறாயே, 

உன் கைகளை நீட்டு என்றார். அவன் கைகளை நீட்ட ,

அவன் கொடுத்த அந்த ஆபரணத்தையே அவனிடம் கொடுத்து மறைந்தார்.ஆனால் இம்முறை அவனுக்கு எந்த கர்வமும் வரவில்லை மாறாக தான் கைகளில் உள்ள செல்வதை கஷ்டப்படுவோருக்கு அளிக்கவே அவன் மனம் வேண்டியது.

அதன் பிறகு நண்பர்கள் இருவரும் தாங்கள் ஈட்டும் செல்வத்தை எளியோருக்கு வாரி வழங்கி மகிழ்ந்தனர்.

திருப்தியால் பெற்ற அமைதியும், மகிழ்ச்சியையும் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்..............
 







மேலும் பதிவுகள் click....


Telegram Channel for offer : click 🔳
 

Please Post Your Comments...........