மாய உலகம்
பகுதி – 1
மேகங்களின் டார்ச் லைட் பூமியின் மீதும் படும் வேளையில் ,பூமி ஒரு நிமிடம் வெள்ளை போர்வை போற்றியது போல காட்சியளித்தது. அந்த வெளிச்சத்தில் என் வாழை தோட்டத்தில் யாரோ ஓடுவது போன்று சத்தம் கேட்டது.
உடனே என் கைகளில் இருந்த டார்ச் லைட்டை எடுக்க ,அதற்கு அவசியம் இல்லாமல் மேகம் மீண்டும் டார்ச் அடித்தது. அந்த வெளிச்சத்தில் வாழை தோட்டத்த்தின் உள்ளே யாரோ ஓடுவது என் கண்களில் தெரிந்தது.
உடனே ஹே ஏய்… ஏ…
யாரு ஓடாத நில்லு என்று வாய் குழற ,நிச்சயம் அது மனிதர் போல தோன்றவில்லை.
இயல்பான மனிதரின் உயரத்தை விட பல மடங்கு சிறிய உருவம் அது. அதை பார்த்து பயம் எழவில்லை மாறாக அது என்ன? என தெரிந்து கொள்ளும் எண்ணமே என் மனதில் மேலோங்கியிருந்தது.
அந்த உருவம் தெரிந்த இடத்தை நோக்கி நடக்க தொடங்கினேன் “மழையின் துளிகள் வாழை இலைகளின் மீது பட்டு சிதறி கண்களில் பட்ட படியே இருந்தது”. என்னால் எதையும் தெளிவாக பார்க்க மூடியவில்லை.
அதனால் ஒரு வாழை இலையை ஒடித்து தலைக்கு மேலே தூக்கி பிடித்து கொண்டு நடந்தேன் ,அந்த உருவம் தோன்றிய இடம் என் நினைவுகளை விட்டு அகல டார்ச் லைட்டை சுற்றி சுற்றி அடித்து பார்த்து விட்டேன் என் கண்களுக்கு அவ்வுருவத்தை எங்கே பார்த்தோம் ,எந்த இடத்தில் பார்த்தோம் என அகப்படவேயில்லை.
நேரமாகிட்டு மழை வேற அதிகமாகிட்டு கிளம்பணுமெ என்று மனதிலே தோன்ற மறுபுறம் “அது மனிதராக இருக்க வாய்ப்பேயில்லை பிறகு என்னவா இருக்கும் ,அதை பார்த்தே ஆக வேண்டும்” என மனதில் நிழலாடி கொண்டே இருந்தது.
இருப்பினும் “மழை நிக்குற மாதிரி தெரியலேயே கிளம்புவோம் காலைல வந்து பாத்துக்கலாம் ” என கிளம்ப நினைத்த தருணம்.
அதற்கு சற்றும் இடமின்றி மீண்டும் யாரோ காய்ந்து கிடந்த இலை சருகுகளின் மேலே ஓடும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட இடத்தில் திரும்பி டார்ச்சை அடித்து பார்த்தேன்,
அந்த சத்தம் என்னை சுற்றி சுற்றி கேட்க ஆரம்பித்தது , “ஒரு நிமிடம் மனதில் அச்சம் தோன்ற ” அச்சத்தில் என் பார்வை ஒரு புறம், டார்ச் லைட் வெளிச்சம் ஒரு புறம் என குழம்பி போய் விட்டேன்.
ஒரு புள்ளியில் இரண்டும் ஒன்றாக சந்திக்க ” மஞ்சள் நிற உடல் அமைப்புடன் குள்ளமான உருவம், அது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” ஆச்சரியத்தில் கண்ணை கசக்க.. ச்சே.. அவசரபட்டுட்டேன்.
அந்த உருவத்தை தவற விட்டு விட்டேன் ,அது என் கண்களில் இருந்து மறைந்தது. சற்று தாமதிக்காமல் அதை நோக்கி ஓட ,டார்ச் லைட் வெளிச்சத்தை தொடர்ந்தேன். இருவரில் ஒருவர் ( டார்ச் லைட்டும் ,நானும் ) கண்ணில் பட்டால் கூட விடும் எண்ணம் இல்லை.
அதோ.. அங்கே பாருங்கள் ஹேய்.. நில் ஏன் என் கண் முன்னே தோன்றி மறைகிறாய் ஓடா…தே.. என்ன பார்த்து பயபட வேண்டியதில்லை நில் என கத்திய படி துரத்த,. “அது வரை தெரியாது
அது என்னை பார்த்து பயந்து ஓடவில்லை மாறாக ” அது என்னை ஏதோ ஒரு குழிக்கு அருகில் கொண்டு நிறுத்தியது. நல்ல வேளை அதிர்ஷ்டவசமாக சுதாரித்து கொண்டு குழிக்கு முன்னமே நின்று விட்டேன்.
அது நிச்சயம் இந்த குழிக்குள் தான் சென்றிருக்க வேண்டும் என எண்ணுவதற்குள் யாரோ என் கால்களை கூறிய முனையால் குத்தினர், வழியில் காலை தூக்கி குதிக்க “சரியான முட்டாள் தான் நான்...” கால் இடறி குழிக்குள் விழுந்து விட்டேன்.
சிறது நேரம் வழுக்கி கொண்டே செல்ல “ஏதோ பூமியின் ஒரு புறம் சென்று மறுபுறம் போகிறோமோ என்ற எண்ணம் கூட தோன்றியது” அடுத்த கணமே அம்மா.. ஆ..ஆ மண் தரை மீது பொத்தென்று விழுந்தேன்.
ஆச்சரியமாக தான் இருந்தது இவ்வளவு ஆழத்தில் வந்து விழுந்திருக்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. “ஒரு வேளை நம் உலகத்தில் இருந்து வேறு மாய உலகிற்கு வந்து விட்டோமோ”.
நல்ல வேளை தப்பித்தேன் எதாவது பாறையின் மீது விழுந்தால் என்ன ஆவது. சற்று என்னை ஆசுவாசபடுத்திக் கொண்டு சுற்றி பார்த்தால் அந்த இடம் கும்மிருட்டாக இருந்தது கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.
அந்த நொடி என் மனதின் கற்பனை அந்த வானத்தின் எல்லைகே சென்று விட்டது.ஆம், நான் கொண்டு வந்த டார்ச் லைட் எங்கே? என கைகளால் நீண்ட நேரம் தரையை கோத,
டார்ச் லைட் எங்கேன்றே தெரியவில்லை “கண் தெரியாத குருடன் போல ஆகி போனது என் நிலைமை, அப்போது என் மனதில் தோன்றியது பேசாமல் அப்போதே கிளம்பி இருக்கலாம் வீணாக வந்து மாட்டி கொண்டோமே என்ற எண்ணம் மட்டுமே ” கைகளால் தரையை தட்டு தடுமாறி தடவி தடவி தேடி
ஒரு வழியாக என் கைகளில் டார்ச் லைட் கிடைக்க.
சற்றும் தாமதமின்றி டார்ச் லைட்டை எடுத்து இயக்க “முதலில் நாம் எங்கிருக்கிறோம் என தெரிந்து கொள்ள வேண்டும்” டார்ச்சை அங்கும் இங்குமாக என்னை சுற்றி அடித்து பார்த்த போது, எனக்கு வலது புறம் ஒரு பாதை நீண்டு கொண்டே சென்றது. நம் ஊருக்கு அடியில் இப்படி ஒரு குகை இருப்பது ஆச்சரியமாக தானே இருக்கும் , எனக்கும் அப்படிதான் அச்சரியம் என் மனம் முழுவதும் ஆட்கொண்டு இருந்தது.
மீண்டும் என்னை ஆசுவாச படுதிக்கொண்டு எழுந்து நின்றேன். ஹா.ஆஆஆ கை கால்களில் ஒரே வழி, டார்ச் லைட்டை உடல் முழுவதும் அடித்து பார்த்த போது தான் கை கால்களில் சில சீராய்ப்புகள் ஏற்பட்டிருந்தது தெரிந்தது.மேலும் அந்த சீராய்பூகள் மீது சகதிகளும் படிந்திருந்தது “உடனடியாக சுத்தம் செய்தாக வேண்டும் இல்லையென்றால் நோய் தொற்று ஏற்பட வாய்புள்ளது என்று என் மனம் எனக்குணர்த்தியது”,
உடனே புண்களை சுத்தம் செய்ய வேண்டும் , அருகில் எதனும் நீர் நிலை போன்று தேங்கி உள்ளதா என டார்ச் லைட் சுற்றி அடித்து பார்த்த போது அதன் வெளிச்சம் எதன் மீதோ பட்டு எதிரொளிப்புகள் என் கண்களை கூசியது, அது நிச்சயம் நீராக தான் இருக்க வேண்டும்.
டார்ச்சை மீண்டும் அதே இடத்தில் அடித்து பார்த்த போது அங்கு சிறிய குட்டை இருந்தது. இங்குள்ள அனைத்திலும் ஆச்சரியம் தான், அதன் நீர் கண்ணாடி போன்று தெளிவாக இருந்தது. அருகில் சென்றேன் ,டார்ச் லைட் வெளிச்சதில் நீருக்கு அடியில் இருக்கும் கற்கள் கூட தெளிவாக தெரிய அதுவும் என் மனதை ஆச்சரிய பட தான் செய்தது.
அதுவரை அவ்வளவு தெளிவான நீர் நிலையை என் ஊரில் நான் பார்த்ததில்லை. அதன் அருகில் அமர்ந்து டார்ச் லைட்டை ஒரு புறம் வைத்து விட்டு ,அதிலிருந்த நீரை கோரி முதலில் முகத்தை கழுவினேன் ,பிறகு கை ,கால்கள் என உடல் முழுவதும் சுத்தம் செய்து கொண்டேன்.
அடடே என்ன இது ஆச்சரியம்! பாருங்கள் ,இங்கே பாருங்கள்.. என் உடல் முழுவதும் உள்ள காயங்கள் மறைகின்றன. இந்த நாள் என்னென்ன ஆச்சரியம் வைத்துள்ளதோ எனக்கு” அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்க கூடும்” இங்கிருந்து உடனே வெளியேர வழி கண்டுபிடித்து ஆகவேண்டும், வந்த வழியில் செல்ல முடியாது. வேறு வழியில்லை உள்ளே நடந்து வெளியேற வேறு ஏதேனும் பாதை உள்ளதா பார்ப்போம்” என முடிவெடுத்தேன்.
அந்த பாதையை நோக்கி நடக்க தொடங்க இருளில் டார்ச் லைட் வெளிச்சம் ஒன்றே எனக்கு பாதை காட்டி கொண்டு இருந்தது. சிறிது தூரத்தை கடந்த வேளை ,தூரத்தில் ஓர் வெளிச்சம் கண்ணுக்கு தெரிய ,”டார்ச் லைட் பிறகு தேவை படலாம் இப்போதைக்கு அந்த வெளிச்சம் வரும் திசையில் நடப்போம்” என அந்த வெளிச்சத்தை நோக்கி வேகமாக நடந்து ஒரு வழியாக அடைந்தேன்.
அந்த கும்மிருட்டில் அவ்வொளி கண்களை கூசும் அளவுக்கு வெளிச்சமாக இருந்தது. கண்களை மறைத்தபடியே அதனுள் புக, அவ்விடம் கண்களை அபகரிக்கும் அழகுடன் மிகவும் ரம்மியமாக சுவர்கள் முழுவதும் படிக கற்கள் நிரம்பி பொழிவுடன் காணப்பட்டன. எங்கிருந்தோ வரும் வெளிச்சம் தான் இந்த படிக கற்களை இப்படி மின்ன செய்திருக்க வேண்டும். அந்த நொடி என் மனதில் ஏற்பட்ட மகிழச்சியை சொல்ல வார்தைகளே இல்லை ,எங்கோ வழி உள்ளது என குஷியில் மனம் குழந்தை போல சேட்டை செய்ய அரம்பித்தது.
அந்த படிக கற்கள் அருகில் சென்று தொட்டு பார்க்க ஆசை, அதன் அருகில் சென்று அமர்தேன், மனதில் சின்ன தயக்கத்துடன் தொட அவை அதன் பொழிவை இழந்தன. மனம் அச்சரியதுடன், புது உற்சாகமும் தந்தது.
பிறகு என்ன சிறு குழந்தைகளின் விளையாடுவது போல மீண்டும் மீண்டும் என அதனை தொட, ஒரு கட்டதில் அதிலிருந்து ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிக்கள் அங்கும் இங்குமாக பறக்க தொடங்கின. அவையே அந்த படிக கற்களின் ஜொலிப்பிற்கு காரணமாக இருக்க வேண்டும் ,அந்த இடம் முழுவதும் அவை பரவி அந்த இடமே பொழிவாய் காணப்பட்டது.
ஆனால் என் மனது மகிழச்சியை இழந்திருந்தது, அதற்கு இது வெளியே இருந்து வரும் ஒளியாக இல்லாததே காரணம் மாறாக “விளையாட இது நேரமில்லை ,சீக்கிரம் வெளியேறும் பாதையை காண்டாக வேண்டும்” என்ற எண்ணமே தோன்றியது. அங்கிருந்து நடக்க தொடங்கினேன் நடக்க நடக்க படிக கற்களின் அடர்த்தி குறைந்து அதன் மீது வசந்த பூக்களே கண் முழுவதும் தோன்ற அரம்பித்தது.
பூக்கள் என்ன ஆச்சரியம் தருகின்றன பாருங்கள் ,நாம் வாழும் இடங்களில் பூக்கள் பல வண்ணங்களுடன் காட்சி அளிக்கும் ஆனால் இங்கு ஒரு பூவே பல வண்ணங்களுடன் தோற்றம் தந்தது. ஒரு புறம் அதை ரசித்த படியே மறு புறம் வெளியேறும் வலியை தேடி கொண்டே நடந்தேன். அது என்னை ஒரு பெரிய வெற்றிடத்திற்கு அழைத்து சென்றது.
வெற்றிடத்தில்....
0 Comments