அன்றொரு வியாழக்கிழமை, அகண்ட வானை பிளந்து சூரிய கதிர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக நம் கதாநாயகனின் முகத்தில் விழ, கண்களை கசக்கியபடி எழுந்தான் கதிர். அவனின் கண்கள் கடிகார முட்களை தேட, மணி சரியாக 6
எழுத்தவன் எங்கோ கிளம்ப தயாரான போது, அவனின் கைபேசி ஒலிக்க கைபேசியை வைத்திருந்த மேசையை நோக்கி சென்றவன்,
கைபேசியை பார்க்க அவன் அப்பா! கைபேசியை எடுத்து ஹலோ அப்பா எப்படிப்பா இருக்கீங்க என கேட்டான்.
மறுமுனையில் அவனின் அப்பா ஏக்கத்துடன், தம்பி நாங்க நல்ல இருக்கோம் நீ எப்படியா இருக்க என கேட்டார்.
அவனோ நான் நல்லா இருக்கேன்ப்பா, நானே உங்க கிட்ட பேசலாம்னு நெனச்சேன் நீங்களே கூப்பிட்டுடீங்க, என்ன விஷயம்பா சொல்லுங்க என்றான்
அவரோ என்ன தம்பி ஏதும் பிரச்சனையா பணம் ஏதும் தேவைபடுதா என கேட்க,
அவனோ அதெல்லாம் இல்லப்பா, நீங்க முதல்ல சொல்லுங்க எதுக்கு கூப்பிட்டீங்க,
அது ஒன்னும் இல்லை தம்பி, உன்னை பாத்து ரொம்ப நாள் ஆச்சுதில்ல அதான்பா எப்ப வர என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு கூப்பிட்டேன்.
ஆமாப்பா நானும் அத சொல்லலாம்னு தான் நினைச்சேன், இந்த வார கடைசியில கிளம்பலாம்னு இருந்தேன், ஒரு வாரம் விடுப்பு எடுத்திருக்கேன்,
வெற்றி சார் கிட்டயும் சொல்லிட்டேன், சனிக்கிழமை ராத்திரி கிளம்பிருவேன்ப்பா என கூற.
சந்தோஷம்யா! தம்பி போட்டில மட்டும் கவனமா இருயா, உடம்ப நல்லா பத்துக்கயா, சரி யா நான் வைக்குறேன் என்றார்,
சரி பா நேரமாகிட்டு நானும் மைதானத்துக்கு போனும் என கூறி கைபேசி இணைப்பை துண்டித்தான்.
சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பியவன் வேகமாக மைதானத்தை அடைந்தான்.
அங்கு பயிற்சியாளர் வெற்றி அவனுக்காக காத்திருக்க, வேலன் மைதானதிற்க்குள் நுழைந்தான்.
வெற்றி வேலனை அழைக்க, பயிற்சி களத்திற்கு வந்து நின்றவன் தனக்கான ஓடு பாதையில் வந்து நின்றான்.
பயிற்சியாளர் வெற்றி தயாரா என கேட்க, வேலன் ஒடுவதற்க்கு தயாரானான்
அவர் ரன் என்ற அடுத்த நிமிடம் ஓட்டம் பிடித்தவன் குறைந்த நேரத்தில் எல்லை கோட்டை கடந்தான்.
பயிற்சியாளரோ வேலா குட் குட், நல்ல டைமிங்ல மூடிச்சிருக்க டா இப்படியே பயிற்சி பண்ணா இந்த தடவ ஸ்டேட்ஸ் அடிச்சிரலாம் என வாழ்த்த
இப்படியே பயிற்சியில் நாட்கள் கடந்தன, அன்று சனிக்கிழமை இரவு வேலன் ஊருக்கு செல்ல கிளம்பி கொண்டிருக்க,
பயிற்சியாளரிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது,
கைபேசியை எடுத்தவன் ஹலோ சார் கெளம்பிட்டேன் சார் இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் ஸ்டாண்ட் கெளம்பிருவேன்,
அவரோ, சரி டா வேலா கவனமா போய்ட்டு வா, தினமும் பயிற்சி தொடர்ந்து பண்ணு, விளையாட்டா இருக்காதா என கூற ,
சரி சார் என்றான் வேலன்
சரி டா நா வைக்குறேன் நீ கிளம்பு என அவர் அழைப்பை துண்டித்தார்.
வீட்டில் இருந்து கிளம்பியவன் நேராக பேருந்து நிலையத்தை அடைத்தான்.அவன் பேருந்து நிலையத்தை அடைவதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.பேருந்தில் ஏரி அமர்ந்தவன் கைகளில் வைத்திருந்த ஏர்போனை எடுத்து காதில் மாட்ட அதில் ஏ.ஆர்.ரகுமான் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.
அப்படியே உறங்கி போனவனின் கனவில் சிறு வயதில், தந்தையுடன் ஊர் திருவிழாவிற்கு சென்றது, நண்பர்களுடன் பள்ளிக்கு சென்றது, தோட்டத்தில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டது, என அனைத்தும் எண்ண அலைகளாய் சிந்தையில் மோதின.
கனவில் மூழ்கியவனை யாரோ அழைப்பது போல இருக்க ,சட்டுனு பதறி .
விழித்தான்.
நடத்துனர் வேலனை தம்பி எங்க பா போற டிக்கெட் எடு என தட்டினார்.
சிரித்துக்கொண்டு அண்ணே ஒரு வயலூர் கொடுங்க என சட்டை பையில் உள்ள 100 ரூபாயை எடுத்து நீட்டினான் ,அதை வாங்கிய நடத்துனர் ஒரு சீட்டை கிழித்து கொடுத்து, மீத சில்லறையையும் கையில் கொடுக்க
வேலனின் பயணம் தொடங்கியது,...மீண்டும் உறக்கத்திற்கு செல்ல
சிறுது நேர பயணத்துக்கு பிறகு வயலூரலாம் வாங்க என நடத்துனர் கூப்பிட, எழுந்தான் வேலன்.
வேலன் தான் கொண்டு வந்த பேக்கை கையில் எடுத்துக்கிட்டு பேருந்தில் இருந்து இறங்கினான்
வேலா வேலா என யாரோ அழைக்க, அது வேற யாரும் இல்லை வேலனின் அப்பா பரமு,
ஹே தம்பி! எப்படியா இருக்க பையா குடுயா என வாங்கி வைத்து கொண்டார்.
நான் நல்லா இருக்கேன் பா நீங்க எப்படி இருக்கீங்க என கேட்டான்.
அவரோ எனக்கு என்னையா நான் நல்லா இருக்கேன், வா வா வீட்டுக்கு போலாம் அம்மா உனக்காக காத்திருக்கா என கூற இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
இருவரும் வீட்டை அடைய.
ஏய் கமலா வா வா யாரு வந்துருக்கா பாரு என அழைத்தார்,
கணவன் சத்தம் கேட்க, மகன் வந்ததை உணர்ந்த வேலனின் தாய் வேகமாக ஓடி வந்து மகனை தழுவி அனைத்து கொண்டார்.
டேய் வேலா! எப்படி டா இருக்க, ஏன் டா அடிக்கடி வந்துட்டு போனா என்ன நாங்க இங்க தனியா தான் கிடக்கோம் என கேட்க
வேலனோ எங்க மா காலைலயே பயிற்சிக்கு போனா வீட்டுக்கு வர 4.00 மணி ஆகும், அப்புறம் பார்ட் டைம்மா வேலைக்கு போரேன் போய்ட்டு வர நைட் 10.00 ஆகும். இதுல போன் பேசுறதே கஷ்டம் ,எப்படி அடிக்கடி வந்து பார்க்க என்றான் வேலன்.
ஏன் பா இவ்வளவு கஷ்டப்படுறியா!
நீ வேணும்னா வேலைலா பார்க்க வேணாம் விட்ரு நா அப்பா கிட்ட சொல்லி பணம் அனுப்புறேன்,நீ பயிற்சிய மட்டும் பாரு டா என கூறினார்.
ஏன் மா அப்பவே ரொம்ப கஷ்ட படுறாரு இதுல எனக்கு வேற செலவு பண்ண சொல்றியா என்றான்.
இவ ஒருத்தி வந்த புள்ளைய வெளிய நிக்க வச்சே பேசுவா உள்ள கூப்டு போய் எதுனாலும் கேழு என்றார்.சிறிதுநேரம் உரையாடிய,
பிறகு அன்று இரவு உணவை முடித்து விட்டு உறங்க சென்றான் வேலன்.
அடுத்த நாள் காலை விடிந்தது, வேலனின் தாய் வேலா எழுத்துருடா சூடா டீ போட்டு வச்சிருக்கேன் பல்லு துலக்கிட்டு வந்து குடி என்றார்.
வேலன் பல் துலக்கிட்டு வரண்டாவிற்கு வர,
வேலனின் தந்தை வா பா வந்து உக்காரு, கமலம் வேலனுக்கு டீ கொண்டுவா என்றார்.
கைகளில் டீயுடன் வந்த கமலா, டீயை வேலனின் கைகளில் கொடுத்தார்.
டீயை வாங்கி குடித்த வேலன், அம்மாவிடம் குளிக்க தோட்டத்துக்கு போரேனென்று சொல்லி விட்டு கிளம்ப.
கமலா சரி பா அப்பாவையும் கூப்பிட்டுட்டு போ என்றார்,
உடனே பரமு, ஆமா வேலா மோட்டார் சின்னச்சின்ன கோளாறு வரும், அப்போ அப்போ சரி பண்ணி ஓட்டுரேன். திடீர்னு ஏதாச்சு கோளாறுனா நீ என்ன பண்ணுவ நானும் வரேன் என வேலனை அழைத்து கொண்டு தோட்டத்துக்கு கிளம்பினார்.
இருவரும் பேசி கொண்டே தோட்டத்தை அடைந்தனர்.
வேலனின் தண்ணீர் வருதா என பார்க்கும் படி வேலனிடம் கூறிவிட்டு மோட்டார் அறைக்குள் சென்றார், தொட்டிக்கு அருகில் சென்றான் வேலன்.
தொட்டியை சுற்றி பாசி பிடித்து கால் வைத்தாலே வழுக்கி விடும் போல இருந்தது,
வேலனின் தந்தை, வேலா தண்ணி வருதா என கேட்க இல்ல பா வரலையே என்றான். இரு என்னனு பாக்குறேன் என்று கூறி அவர் மோட்டாரை சரி பார்த்து கொண்டிருக்க,
வேலன் தனது கைபேசியை எடுத்து செல்பீ எடுத்து கொண்டிருந்தான்.
அந்நேரம் திடீரெண்டு சட சட வென்று குழாயில் இருந்து வந்த தண்ணீர் வேலனின் கால்களை மோதியதில்,
சட்டென்று நிலை தடுமாறிய வேலன் அப்பா என தடுமாற, சுதாரித்து கொண்டு அருகில் இருந்த தொட்டியின் கைப்பிடியை பிடித்து கொண்டான்
வேலனின் சத்தம் கேட்டு ஓடி வந்த பரமு என்னாச்சுப்பா ஏன் அப்படி கத்துன என கேட்க, ஓன்னும் இல்லைப்பா லேசா வழுக்கிட்டு என்றான் வேலன்.
பரமு எப்பா பத்துப்பா சரி நீ கொஞ்சம் ஓரமா இரு, இந்த பாசியலாம் கழுவி சுத்தம் பண்ண அப்பறமா நீ குளிக்கலாம் என்றார்.
அப்பா அப்பா இருங்க நானும் உங்களுக்கு உதவி பன்றேன் என வேலன் கூற.
சரி பா பார்த்து கவனம், அவசரம் ஓன்னும் இல்லை பொறுமையா பண்ணு என்றார், இருவரும் சிறிது நேரத்தில் வேலையை முடிக்க,
பிறகு தந்தையிடம் நான் குளிச்சிட்டு வரேன் என்று கூறி சென்றான், சிறிது நேரத்தில் குளித்திவிட்டு திரும்ப
பரமு வேலனுக்கு தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களை பறித்து கொண்டு வந்து கொடுத்தார்.
கொய்யா பழங்களை ருசித்தபடியே தந்தை, மகன் இருவரும் பேசி கொண்டே நடக்க வீட்டை அடைந்தனர்.
அவர்களுக்காக கமலா காத்திருக்க, வீட்டிற்குள் நுழைந்தனர் இருவரும்
கமலா, வந்துட்டீங்களா உங்கள தான் தேடிகிட்டே இருந்தேன். குளிக்க ஏன் இவள நேரம் சாப்பிட நேரம் ஆகுதுல என செல்லமாக கடிந்து கொள்ள.
பரமு, கமலா தொட்டிலா பாசி பிடிச்சு போய் இருந்துச்சு அதான் சுத்தம் பண்ணுனோம், அப்புறம் வேலன் குளிச்சிட்டு வந்தான், தோட்டத்துல இருந்து நாலு பழம் பறிச்சு கொடுத்தேன் பேசிக்கிட்டே நடந்தோம் அதான்மா நேரம் ஆச்சு என்றார்.
கமலாவோ, சாப்புடுற நேரத்துல பழம் எதுக்கு அப்புறம் புள்ளை எப்படி நல்லா சாப்பிடுவான், சரி சரி சாப்பிட வாங்க என அழைக்க
வீட்டிற்குள் சென்றவர்கள் நேராக சாப்பிட அமர்த்தனர், இருவருக்கும் உணவு பரிமாறிபடியே கமலா, என்னங்க சந்தைக்கு போய் புள்ளைக்கு கறி வாங்கிட்டு வாங்க நல்லா ஆசையா சாப்பிடுவான் என்றார்.
பரமு, சரிமா நான் சாப்பிட்டுட்டு சந்தைக்கு போய் வாங்கி குடுத்துட்டு அப்புறமா தோட்டத்துக்கு போறேன் என்றார்.
இருவரும் சாப்பிட்டு முடிக்க,
சந்தைக்கு கிளம்பிய பரமு வேலனிடம், அப்பா கறி எடுத்துட்டு வரேன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கு பக்கத்து ஊருல பொருட்காட்சி போட்ருக்காங்க சாயங்காலம் நீ,நான்,அம்மா மூணு பேரும் போய்ட்டு வருவோம் என்றார்.
ஆமா தம்பி நீ சின்ன பையனா இருக்கும் போது தோளுல வச்சிக்கிட்டு நடந்தே பக்கத்து ஊரு வர போவோம் நினைவிருக்கா என கேட்க,
வேலன், ஆமா பா தோட்டத்து வழியா அந்த ஒத்த அடி பாதைல, ஊரு காரங்க கூட சேர்ந்து போவோம் கலைப்பே தெரியாது என கூற,
இருவரும் எண்ண அலைகளில் மூழ்க
சரி பா நான் சந்தைக்கு போயிடு வரேன் என்று பரமு கிளம்ப. வேலனும் ஊருக்குள் சென்றான்.
மதியம் நெருங்க பரமு வேலன் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர், வேலன் தந்தையிடம் ஊரில் ஆட்கள் நடமாட்டமே இல்லையப்பா என கேட்க,
அவரோ ஆமாப்பா எல்லாரும் திருவிழா நாட்கள்ல தான் ஊருக்கு வாரங்க, முடிஞ்சதும் ஒரு நாள் கூட இருக்குறது இல்லை அவுங்களுக்கு டவுன்ல கிடைக்குற வசதி கிராமத்துல குறைவு தானே என்றார்.
கமலாவோ, சரி நேரம் ஆச்சு பாருங்க சாப்பிடனும்ல போய் கை, கால் கழுவிட்டு வாங்க
பிறகு உணவு உட்கொள்ள வராண்டாவில் உள்ள மேசையில் வந்து அமர்ந்தனர். கமலா அவர்களுக்கு உணவு பரிமாற. அனைவரும் பேசிக்கொண்டே மதிய உணவை களித்தனர்.
பிறகு பரமு வெளியே கிளம்பினார், வேலன் அவன் அறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொண்டான்.
சிறிது நேரத்தில் அறையில் இருந்து வெளியே வர,
வீட்டில் அப்பா இருக்க! ப்பா சீக்கிரம் வந்துட்டீங்க என்றான்.
ஆமா தம்பி பொருட்காட்சி போனும்ல சீக்கிரம் போன தான் நேரத்துக்கு வீட்டுக்கு வர முடியும் அதான் சீக்கிரமே வேலைய முடிச்சிட்டு வந்துட்டேன்.
வேலன் தந்தையிடம், அப்பா வயலுல விளைச்சல் எப்படி பா இருக்கு என கேட்க, எங்க மழை ஓழுங்க பெஞ்ச தான, ஒரு வருஷம் பெய்ய மாட்டிக்கு இன்னொரு வருஷம் அதிகமா பெஞ்சு பயிரலாம் அடிச்சிட்டு போயிருது என்றார் பரமு.
வேலனின் மனதில் எப்படியாது தன் குடும்பத்தை மேலே கொண்டு வர வேண்டும் என்று எண்ணி கொண்டான்.
நேரம் கடக்க சாயங்காலம் ஆனது.
பிறகு மூவரும் கிளம்பி பொருட்காட்சிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றனர். சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு பேருந்து வர ,அதில் ஏறி பொருட்காட்சியை அடைந்தனர்.
பொருட்காட்சியில் வித்யாசமான ராட்டினங்களில் ஏற, நடுவே சில நொறுக்கு தீணிகள், விளையாட்டு பொருள்
அதில் ஒரு ராட்டினம் கடிகாரம் முள் போல சில நிமிடம் அந்தரத்தில் நின்ற படி சுற்ற, அதை பார்ப்பதற்கே தலை சுற்றியது.அவர்கள் மூவரும் அந்த ராட்டினத்தில் ஏறி மகிழ்ந்தனர்.
பின் ஜெயண்ட் வீல் ராட்டினம் என சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக சுற்றி பார்த்து ஆனந்தம் அடைந்தனர்.
பிறகு நேரம் ஆனதால் பரமு கிளம்பலாம் நேரம் ஆகிவிட்டது என கூற
மூவரும் அங்கு இருந்து கிளம்பி பேருந்து நிறுத்தத்தை அடைய சிறுது நேர காத்திருப்பு பிறகு பேருந்து வந்தது. கூட்டமாக இருந்ததால் அம்மாவையும்,அப்பாவையும் முன்னே ஏற சொல்லிவிட்டு பின்புறம் ஏற சென்றான்.
கடைசி ஆளாக நின்றதால் அவன் ஏறுவதற்குள் நடத்துனர் விசில் அடிக்க பேருந்து கிளம்பியது,
சட்டென்று குதித்தவன் கால் வழுக்க அழுத்தி தரையில் ஊன்ற, அருகில் இருந்தவர்கள் அவனை பிடித்ததால் கிழே விழாமல் ஏறி உள்ளே சென்றான் காலில் வலி ஏதும் இல்லாததால் அதை கவனிக்கவில்லை.
பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் ,நேரம் ஆனதால் ஊர் எல்லையில் உள்ள கடையில் இரவு உணவை முடித்தனர். பிறகு வீட்டுக்கு சென்றதும் அழுப்பில் தூங்க சென்றனர்.
காலை விடிந்தது, படுக்கையில் இருந்து எழுந்தவன் கால்களில் வலியை உணர, கட்டிலில் இருந்து எழுந்தான்.
நிற்க முற்பட்ட போது கால்களை அவனால் ஊன்றவே முடியவில்லை
அப்பா அம்மா என்று கத்தனான்........
சத்தம் கேட்டதும் என்னப்பா என்னாச்சு என கேட்டுக்கொண்டே அவன் அறைக்குள் பரமு நுழைந்தார். அங்கே அவர் மகன் கால்களை நொண்டிய படி நின்று கொண்டிருக்க வேகமாக அவன் அருகில் சென்று தாங்கி பிடித்தார்.
பிறகு அவனை வீட்டின் வராண்டாவிற்கு அழைத்து வந்து ஒரு மேசையின் மீது அவனை அமர வைத்தார். அவனை பார்த்த கமலா ஏங்க என்னங்க ஆச்சு ஏன் நொண்டிக்கிட்டு நிக்குறான் என கேட்க
பரமு, எம்மா போய் கொஞ்சம் தண்ணி கொண்டுவா மா என்றார்.
மகனிடம் எப்படி தம்பி ஆச்சு என கேட்டார் அவன் நேற்று நடந்ததை கூறி, நேத்து வரைக்கும் வலி தெரியலப்பா இன்னைக்கு எழுந்து நிக்க கூட முடியல என்றான்.
கமலா தண்ணீர் கொண்டு வர அதை வாங்கி மகனை எப்பா கொஞ்சம் தண்ணி குடிக்க சொன்னார். பிறகு அவனை அழைத்து கொண்டு மருத்துவ மனைக்கு செல்ல
மருத்துவர் அவனை பரிசோதனை செய்து விட்டு,
பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல தசை சின்ன பிசகிறுக்கு, ஆனா ஒரு மாசம் வேகமா நடக்கவோ, ஓடவோ கூடாது. முடிஞ்ச அளவுக்கு ஓய்வு எடுத்துக்கோங்க என்றார். வேலனும், அவன் தந்தையும் சார் இவனுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல போட்டி இருக்கு என கூற.
ஐயா ஓடவே கூடாதுனு சொல்றேன் நீங்க போட்டி இருக்குனு சொல்லுறீங்க, ஒரு வேகமா நடக்க கூட கூடாது, ஒரு மாசம் அப்புறம் வாங்க என்று சொல்ல பிறகு அங்கிருந்து கிளம்பினார்.
பரமு வேலனை நோக்கி வருத்த படாதப்பா இந்த தடவ இல்லனா என்ன அடுத்த வருஷம் பாத்துக்கலாம் என்றார். வேலனோ கலங்கவில்லை, இல்லப்பா டாக்டர் சொன்னதப்பத்தி நான் யோசிக்கல அடுத்து எப்படி இதுல இருந்து மீண்டு வரலாம்னு யோசிக்குறேன் என்றான்.
இருவரும் வீட்டிற்கு வந்தனர்,அவர்களை பார்த்த கமலா என்னங்க ஆச்சு டாக்டர் என்ன சொன்னாரு என்று கேட்டார்.
டாக்டர் கூறியதை பரமு கமலத்திடம் கூற அவர் வேலனிடம் விடுடா இந்த வருஷம் இல்லனா என்ன அடுத்த வருஷம் பாத்துக்கலாம் என்றார்.
வேலனோ, தாயிடம் என்னால முடியும் நான் நல்லா முயற்சி பண்ணி சீக்கிரம் சரி ஆகிடுவேன் என்று தைரியமாக சொன்னான்.
வேலன், தன் பயிற்சியாளரை தொடர்பு கொண்டு நடந்ததை கூற.
வெற்றி, ஒரு மாசம் தான நல்லா ஓய்வு எடுத்துக்க முடிஞ்ச அளவுக்கு ரொம்ப சிரமபடாமா முயற்சி பண்ணு சின்ன சின்ன பிஸியோ பண்ணு என்று நம்பிக்கையாக கூறினார்.
ஒரு மாத காலம் வீட்டிலேயே ஓய்வு எடுத்தான். அப்போ அப்போ சும்மா உக்காராமல் நடை பயிற்சியும், சின்ன சின்ன பிஸியோ பயிற்சி கொடுக்க அவன் கால்கள் சீக்கிரமாகவே முன்னேற்றம் அடைந்து வந்தது.
பரமுவும்,கமலமும் அவனின் தன்னம்பிக்கை கண்டு ஆச்சரிய பட்டனர்.
ஒரு மாதம் கழித்து பரிசோதனைக்கு டாக்டரிடம் சென்றார், அவர் வேலனின் கால்களை பரிசோதிக்க, பரவா இல்லை தம்பி வேகமா சரியா ஆகிட்ட, இருந்தாலும் நீங்கள் லேசா பயிற்சியில் ஈடுபடலாம், போட்டியில் கலந்துக்க வேணாம் என அறிவுரை வழங்கினார்.
வேலன் அவனால் முடியும் என்று நம்பினார் மனம் தளரவில்லை.வீட்டிற்கு வந்ததும் ஊருக்கு செல்கிறேன் என தந்தையிடம் கூறினான்.கமலா எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை, ஏங்க நீங்கலாவது சொல்லுங்க என்று பாராமுவிடம் கூற.
பரமு, வேலனை பார்த்து கண்டிப்பா போய் தான் ஆகணுமப்பா என்றார்.
ஆமா பா என்னால முடியும்பா நம்புங்க என்றான். அவர் அவனை தடுக்கவில்லை பார்த்து கவனமா போய்ட்டு வா என்று தைரியம் கூறி அனுப்பி வைத்தார்.
கமலம், என்னங்க நீங்களும் அவன் கூட சேர்ந்துட்டு புரியாம பேசுறீங்க என கேட்க. இல்லம்மா அவன் போகட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு அவனால முடியும்னு என்றார். அப்பா கூறியதை கேட்ட அவனின் தன்னம்பிக்கை மேலும் அதிகரித்தது.
வேலன் வீட்டில் இருந்து கிளம்பி சென்னைக்கு சென்றான்.அங்கு அவன் பயிற்சியை தொடங்கினான்.
முதல் நாள் பயிற்சிக்கு சென்ற போது அவனால் முன்னளவுக்கு வேகமாக வேகமாக ஓட முடியவில்லை, மிகவும் கடினமாக இருந்தது.
வெற்றி அவர்கள் வேலனுக்காக பிசியோ பயிற்சிக்கு ஏற்பாடு செய்து தந்தார்.
அந்த கடினங்களை கடந்து தொடர்ந்து பயிற்சி செய்தான்.
வெற்றிராமும், அவனுக்கு பல அறிவுரைகள் கூற தொடர்ந்து பயிற்சி செய்தான். தினமும் வழக்கத்தை விட அதிக நேரம் பயிற்சி செய்தான். இடைஇடையே பிசியோ பயிற்சியும் செய்தான்.
அவன் கடுமையாக பயிற்சி செய்ததால் முன்னளவுக்கு அவனால் ஓட முடிந்தது.
அப்டியே ஒரு மாதம் உருண்டு ஓடியது.
போட்டி தேதி நெருங்கியது. போட்டியை காண்பதற்கு வேலன் ,பரமுவை தொடர்பு கொண்டான். நாளை நடைபெறும் போட்டிக்கு நீங்கள் இருவரும் கண்டிப்பா வர வேண்டும் என அழைத்தான்.
அன்று இரவு அவன் தந்தையும் , தாயும் வருவதாக கூற அவர்களை அழைத்து வர பேருந்து நிலையத்துக்கு புறப்பட்டான். இருவரும் வந்தவுடன் அவர்களை அழைத்துக்கொண்டு தான் தங்கி இருந்த அறைக்கு வந்தான்.
அவர்கள் அனைவரும் தூங்க சென்றனர். வேலன் அன்று இரவு நிம்மதியாக தூங்கினான். போட்டி குறித்து எந்த பயமும் அவனிடம் இல்லை.
கண்களை மூடி திறந்தால்,
வேலன் ஓட்டப்பந்தய களத்தில் நின்று கொண்டிருந்தான். அவனுடன் ஓடுவதற்கு ஆறு பேர் தயாராக இருந்தனர். போட்டியை தொடங்குபவர் வானை நோக்கி சுட
தோட்டாக்கள் போல அனைவரும் சீறி பாய்ந்தனர். வேலனில் கால்கள் பின்தங்கியே இருந்தன.
மெல்ல மெல்ல வேகைத்தை அவன் அதிகரிக்க அவன் கால்கள் முதலாக ஓடிய இருவருக்கும் முன்னே வந்தது.
தொடர்ந்து ஓட்டம் பிடிக்க எல்லை கோடு கண்களில் பட்டது எல்லை கோட்டை வேலன் கடந்தான். பரமு,கமலம்,வெற்றிராம் மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.
முதலாவதாக எல்லை கோட்டை எட்டி பிடித்து இருந்தான் நம் தன்னம்பிக்கை காதலன் ..........................
இனி வரும் காலங்களிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவான் வேலன். அந்த நம்பிக்கை அவனிடம் உள்ளது.
என்னிடம் உள்ளதா?
Telegram Channel for offer : 🔘Click
இத்தளத்தின் மேலும் பதிவுகள் click...
Please Post Your Comments................
0 Comments